How to make a portable software? (tamil)

Posted by on | | 0 comments

எந்நேரமும் கணனியில் வேலைசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும், வேவ்வேறு இடங்களில் (பிற) கணனிகளில் வேலைசெய்ய வேண்டி ஏற்படும் போது நமக்கு தேவையான மென்பொருட்களை எடுத்து சென்று அக்கணனிகளில் நிறுவி வேலையை ஆரம்பிக்கும் போது காலம் கடந்துவிடும். 
அவாவாறான சந்தர்ப்பங்களில்  கையடக்கமான (Portable) மென்பொருட்களி இருந்தால் நமது வேலைகளை இலகுவாக்கிக் கொள்ளலாம்.

எங்கும் எடுத்துச் செல்ல  கூடிய Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!



இதற்கு வேறாக மென்பொருட்களும் தேவையில்லை, இதற்கு தேவைப்படுவது  WIN RAR மென்பொருள் மட்டுமே.
இங்கு portable VLC player application ஒன்றை உருவாக்குவது எப்படியென பார்ப்போம்.
VLC player (ஊடக இயக்கி) ஒன்று செயற்பட தேவையான கோப்புகளை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.



அவற்றை WinRar archive ற்கு add செய்து கொள்ளுங்கள்.



பின் வரும் dialog box ல் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு அமைப்புகளை மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்பபொழுது Advanced எனும் பகுதியில் SFX options என்பதை தெரிவு செய்யுங்கள்.
பின் General tab இல் பிரித்தெடுத்த பின்  செயல் படுத்த வேண்டிய கோப்பின் பெயரை எழுதி OK பொத்தானை அழுத்துங்கள்.




பின்னர் Text and Icon எனும் பகுதியில் பின்வருமாறு மாற்றங்களை செய்யுங்கள்.

அதன் பின் SFX option இல் உள்ள Modes tab பை கிளிக் செய்து, 

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மாற்றங்களை செய்யுங்கள். அவ்வளவே தான் கையடக்க மென்பொருள் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதை எந்த கணனியிலும் நிறுவாமல் பயன்படுத்தலாம்.

நீங்களும் உங்களுடைய  PORTABLE மென்பொருளை உருவாக்கி விட்டீர்களா?


உங்கள் ஜிமெயில் ஹேக் (Hack) செய்யப்பட்டால்! எப்படி திரும்ப பெறுவது?

Posted by on | | 0 comments
மின்னஞ்சல் என்பது கணிப்பொறித்துறையில் உள்ளவர்கள் என்றில்லாது அனைவரும் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்ற சாதனம்.

ஒரு சிலர் தனக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்துள்ளதா என்று அடிக்கடி பார்க்கும் அளவிற்கு அதில் மிக போதையானவர்கள். தற்போது பல நிறுவனங்களும் சேமிப்பு அளவை அதிகளவில் கொடுத்து இருப்பதால் தங்கள் முக்கிய தகவல்களை கூட அதில் சேமித்து வைத்துக்கொள்கிறார்கள்.
தாங்கள் எங்கே சென்றாலும் தங்கள் தகவலை எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் ஒன்றுக்கு இரண்டாகவும் அதற்க்கு மேலும் உருவாக்கி வைத்துக்கொள்கிறார்கள், அந்த அளவிற்கு அதன் பயன்பாடு உள்ளது.

இந்த இடுகையில் ஜிமெயில் பற்றிய தகவல்களை கூறுகிறேன்

மின்னஞ்சலின் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில் அதன் முக்கியத்துவமும் அதிகரிக்கிறது. அதுவும் பதிவர்கள் பலர் தங்கள் தளத்திற்கும் இதே ஐ டியை பயன்படுத்துவதால் இதன் முக்கியத்துவம் இன்னும் வலுப்பெறுகிறது.

தற்போது ஹேக்கிங் (Hack) என்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது, கொஞ்சம் ஏமாந்தாலும் நாம் ஆசை ஆசையாய் வைத்து இருந்த, நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த முகவரி உட்பட பல தகவல்களை இழக்க நேரலாம். இதற்கு உதாரணமாக நமது பதிவர்கள் பலரை குறிப்பிடலாம்.

இதில் நமது மின்னஞ்சல் ஹேக்கிங் செய்யப்பட்டால் அதை எப்படி திரும்ப பெறுவது என்று கூறுகிறேன். ஹேக்கிங் செய்யப்பட்டால் 100% திரும்ப பெற முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, ஆனால் முடியாதது இல்லை முயற்சி செய்யலாம் என்று தான் கூகிள் கூறுகிறது.

ஐயோ! போச்சே என்று தலையில் கைய வைத்து உட்காராமல் அதை சரி செய்ய முடியுமா என்று பொறுமையாக யோசிப்பதே புத்திசாலித்தனம்.

பிரச்சனை வராமல் உஷாராக இருப்பது ஒரு வகை, அப்படி வந்து விட்டால் என்ன செய்வது அதற்கு சில முன்னேற்பாடுகளை செய்து விடுதல் இன்னும் நலம், அதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

முதல் பிரச்சனை கடவுச்சொல் (Password) மறந்து விட்டால் என்ன செய்வது?


உங்களுடைய கூகிள் கணக்கில் My Account or Google mail --> settings --> Accounts and Import --> Google Account Settings உள்ளே சென்று படத்தில் உள்ள Change password recovery options ஐ சொடுக்குங்கள், உடன் உங்களை திரும்ப ஒரு முறை உங்கள் கடவுச்சொல்லை பதிய கூறும், உங்கள் கடவுச்சொல்லை பதிந்த பிறகு கீழே உள்ள படத்தில் உள்ள பக்கம் திறக்கும்




Email பகுதியில் நீங்க secondary mail இடத்தில் உங்களின் மற்ற ஒரு முகவரியை கொடுங்கள் (முக்கியமாக இரண்டு முகவரிக்கும் ஒரே கடவுச்சொல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்)

SMS பகுதியில் உங்க கைத்தொலைபேசி எண்ணை கொடுக்கவும்

Security Question பகுதியில் உங்கள் விருப்ப கேள்வி பதிலை தேர்வு செய்யவும், மறந்து விட்டதாக நீங்கள் கருதினால் எப்போது வேண்டும் என்றாலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

இனி உங்கள் கடவுச்சொல் தொலைந்து (மறந்து) விட்டால் மேற்கண்ட முறைப்படி உங்கள் ஜிமெயில் கணக்கை மீண்டும் பெற முடியும்.

உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டு இதை பயன்படுத்தினால் உங்கள் secondary மின்னஞ்சலுக்கு உங்கள் கடவுச்சொல் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் வரும், எனவே பதட்டத்தில் பலமுறை முயற்சி செய்ய வேண்டாம், இது நீங்கள் முயற்சிக்கும் போதே கூகிள் உங்களுக்கு அறிவுறுத்தும்.

இது வரை உங்கள் கடவுச்சொல் மறந்து விட்டால் எப்படி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் கண்டீர்கள், உங்கள் கடவுச்சொல் ஹேக்கிங் செய்யப்பட்டால்...

இது தான் பிரச்சனையானது

உங்கள் கடவுச்சொல்லை ஹேக் செய்பவர் முதலில் செய்வது உங்கள் பாதுகாப்பு தகவல்களை அழிப்பது தான், அதாவது உங்கள் secondary mail, SMS, Security Question ல் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும் நீக்கி இருப்பார்கள், இதனால் குட்டி கரணம் அடித்தாலும் உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற முடியாது.

ஐயய்யோ! அப்புறம் என்னங்க பண்ணுறதுனு நீங்க பேதி ஆவது தெரியுது :-) இதற்க்கு கூகிள் உங்களுக்கு கொடுக்கும் கடைசி வஜ்ராயுதம் தான் இந்த லிங்க். இங்கே சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுங்கள்.

நீங்கள் தினமும் பயன்படுத்தும் கணிப்பொறி இடத்தில் இருந்தே கொடுங்கள் ஏன் என்றால் இதை நீங்கள் submit செய்யும் போது உங்கள் IP கூகிள் நிறுவனத்தாரால் ட்ராக் செய்யப்படும், எனவே ஒரே IP யாக இருப்பது உங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

நீங்கள் கூகிள் கணக்கு துவங்கியபோது உங்களுக்கு ஒரு Welcome மின்னஞ்சல் வந்து இருக்கும் அதையும் இந்த லின்க்கில் சென்று கூகிள் என்னென்ன தகவல்கள் கேட்கிறது என்பதையும் அறிந்து அதை தொகுத்து பாதுகாப்பான இடத்துல சேமித்து வைத்துக்குங்க. எப்படியும் இரண்டு மின்னஞ்சல் வைத்து இருப்பீங்க, கண்டிப்பா இரண்டிற்கும் ஒரே கடவுச்சொல்லை வைக்க வேண்டாம். ஒரு மின்னஞ்சல் கடவுச்சொல் ஹேக் செய்யப்பட்டால் பிறகு அதில் உள்ள secondary மின்னஞ்சலும் ஹேக் செய்ய வசதியாக போய் விடும் (ஒரே கடவுச்சொல்லாக இருந்தால்).

உங்கள் மின்னஞ்சலை யாராவது பயன்படுத்துகிறார்களா! என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்கள் கூகிள் மின்னஞ்சல் கீழ் பகுதியில் Last account activity: * hours ago on this computer. Details என்ற ஒரு வரி இருக்கும் இதில் நீங்கள் Details தொடுப்பை சொடுக்கினால் அதில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் IP இருக்கும், மாறி இருந்து சந்தேகம் வந்தால் உங்கள் கடவுச்சொல் சம்பந்தமாக உள்ள அனைத்து தகவல்களையும் மாற்றி விடுங்கள்.

எல்லாவற்றையும் செய்தும் ஒண்ணுமே வேலைக்கு ஆகலை என்னங்க பண்ணுறது! அப்படின்னு தலைய சொறியறீங்களா! ஹி ஹி வேற ஒண்ணுமே பண்ண முடியாது மனச தேத்திக்கிட்டு வேற ஒரு ஐ டி யை உருவாக்கி அதையாவது பத்திரமா வைத்துக்குங்க. சரக்கடிக்கிற ஆளா இருந்தா சரக்கு போட்டு மட்டை ஆகிடுங்க, சரக்கடிக்காத ஆளா இருந்தா ஜில்லுனு மோர் குடிச்சுட்டு தூங்கிடுங்க :-))


தொலைந்த எந்தவொரு மென்பொருளினதும் சீரியல் கண்டுபிடிக்க....75 KB Software

Posted by on | | 0 comments
பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது.

கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்

[licensecrawler1.jpg]

Please Leave Your Comments.....


உங்கள் கணினி ஏன் தானாகவே ரீஸ்டார்ட் ஆகின்றது. அதை எவ்வாறு தடுக்கலாம்?

Posted by on | | 0 comments
http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/4535317/computermonitor-main_Full.jpg


1. உங்கள் கம்ப்யூட்டர், இயக்கத்தில் சூடு அடைகிறது. ஏர் கண்டிஷனர் குளிரில் இருந்தாலும் உள்ளே சூடு உருவாகிக் கொண்டு தான் இருக்கும். அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடுகையில் கம்ப்யூட்டரின் சிபியு தானாக ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். எதனால் சூடு ஏற்படுகிறது? கம்ப்யூட்டரில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் அப்படிப்பட்டவையே. அவை இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.

மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள் பெரிய அளவில் ப்ராசசரின் சக்தியை உறிஞ்சும் வகையில் உள்ளதால் சூடு அதிகம் உருவாகும் நிலை ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வீடியோ ஆடியோ புரோகிராம்கள் அதிக சக்தியைப் பயன்படுத்துகின்றன. அதே போல் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை வரும். அடுத்ததாக அளவுக்கதிகமாக கம்ப்யூட்டர் கேபினுள் சேரும் தூசியும் சூடு வெளியாவதைத் தடுக்கும். சூட்டை வெளித் தள்ளும் மின்விசிறிகள் சரியான அளவில் இயங்குவதைத் தடுக்கும். இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். கேபினைத் திறந்து தூசியை வெளியே எடுக்கும் சாதனம் கொண்டு கேபினைச் சுத்தம் செய்திட வேண்டும்.

சூடு அதிகமாவதெல்லாம் என் கம்ப்யூட்டரில் இல்லை; இருந்தாலும் ரீ ஸ்டார்ட் ஆகிறது என்றால் அடுத்தபடியாக உங்கள் கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனை செய்திட வேண்டும். உங்கள் ப்ராசசர் ராம் மெமரியின் சேதமடைந்த இடத்தில் உள்ள டேட்டாவினைப் பெற முயன்று தோற்றால் கம்ப்யூட்டர் உடனே ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கும். இதனைக் கண்டறிய உங்கள் ராம் மெமரி ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் எந்த ஸ்டிக்கில் பிரச்சினை உள்ளது என்று தெரியவரும். அதனை மட்டும் மாற்றலாம்.


இதுவும் சரியாக உள்ளது என்று தெரிய வந்தால் கம்ப்யூட்டரில் உள்ள செட்டிங் ஒன்றை மாற்றினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிஸ்டம் எர்ரர் ஏதேனும் ஏற்பட்டால் உடனே ரீஸ்டார்ட் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்ஷனை ஆப் செய்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும். இதனை மேற்கொள்ள
01. Start ----- Control Panel என்று சென்று Performance and Maintenance என உள்ளதில் கிளிக் செய்திடவும்.

02. இதில் உள்ள System லிங்க்கில் கிளிக் செய்து
03. பின் Advanced டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
04. இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில் Settings பட்டனில் கிளிக் செய்திடவும்.
05. இதில் "Automatically Restart," என்று தரப்பட்டு அதன் அருகே தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து அதனை எடுத்துவிடவும்.
இது System Failure பிரிவில் இருக்கும். பின் ஓகே கிளிக் செய்து அனைத்து விண்டோக்களை மூடவும். இனி உங்கள் கம்ப்யூட் டர் எர்ரர் ஏற்படுவதனால் ரீஸ்டார்ட் ஆகாது.


இந்த செட்டிங்கை விண்டோ விஸ்டாவில் எப்படி செயல்படுத்துவது என்று பார்க்கலாம். Start>Control Panel சென்று "System" என்பதில் கிளிக் செய்திடவும். (இதனைப் பெற நீங்கள் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்) இந்த விண்டோவில் "Advanced System Settings" என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் "Startup and Recovery" என்பதன் கீழ் பார்க்கவும். இங்கு "Settings" பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் "Automatically Restart" என்பதன் கீழாக என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

அநேகமாக மேலே சொன்னவற்றில் இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை தீர்ந்துவிடும். இருப்பினும் நன்மையும் தீமையும் பிறர் தர வரா என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் அண்மையில் என்ன செய்தீர்கள் என்று பார்க்கவும். ஏதேனும் ஒரு புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றை நிறுவியிருக்கலாம். அல்லது ஹார்ட்வேர் சாதனம் ஒன்றை இணைத்திருக்கலாம். அப்படியானால், அதனை நீக்கிப் பார்க்கவும். பிரச்சினை தொடர்கிறதா என்று கவனிக்கவும். மீண்டும் பிரச்சினை இருந்தால் இணைத்த ஹார்ட்வேர் சாதனத்திற்கான புதிய டிரைவர் தொகுப்பினை அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் தளத்திலிருந்து இறக்கிப் பதியவும்.


இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை ஏதேனும் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினாலும் ஏற்பட 100 சதவிகித வாய்ப்புண்டு. எனவே நீங்களாகக் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஸ்பைவேர் கண்டறியும் தொகுப்பினையும் இயக்கிப் பார்க்கவும். அடுத்ததாக கண்ட்ரோல் பேனல் சென்று அதில் உள்ள ஆட்/ரிமூவ் புரோகிராம் பிரிவிற்கான ஐகானில் கிளிக் செய்து உங்களுக்குத் தற்சமயம் தேவையில்லாத புரோகிராம்களை நீக்கவும். தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வதும் ரீஸ்டார்ட் பிரச்சினைக்கு ஒரு மருந்தே.

உங்களுக்குப் பிடித்தமான வீடியோவினைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில், நண்பருடன் சேட்டிங் செய்து கொண்டிருக்கையில், பிரியமான கடிதத்தினைத் தயார் செய்து கொண்டிருக்கையில் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் செய்தால் நிச்சயம் என்ன கொடுமைடா என்று எண்ணத் தோன்றும். எனவே மேலே குறிப்பிட்ட வழிகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்திப் பார்த்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவே புத்திசாலித்தனம்.


அழிந்த பைல்களை மீட்டெடுக்க இதுவும் ஒரு வழிதான்..!

Posted by on | | 3 comments



http://www.datarecovery.com.au/assets/images/front_logo.gifகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன. இந்த பக்கங்களில் இவை குறித்து அடிக்கடி எழுதப் பட்டு வருவதும் வாசகர்களுக்குத் தெரியும். அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இதனை Data recovery என்னும் முகவரி கொண்ட தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது. பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும். எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

செய்துபார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை போட மறக்காதீர்கள்....



http://doublesc.com/include/images/dataRecovery.jpg


உங்கள் ஆன்டிவைரஸ் வேலைசெய்கிறதா? கண்டுபிடிப்போம் வாங்க...!

Posted by on | | 2 comments
 இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் கொடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது?
01. அனைவரினதும் கணினியிலும் உள்ள NOTE PAD இனை OPEN செய்துகொள்ளவும்.

02. கீழுள்ள வரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
 
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*


03. பின் அதனை fakevirus.exe என்ற பெயரில் செய்யவும்.
04. அந்த பைல் DELETE ஆகிவிட்டால் உங்கள் ஆன்டிவைரஸ்  சிறப்பாக வேலை செய்கிறது என அறிந்துகொள்ளலாம். அவ்வாறு ஆகவில்லை என்றால் உங்கள் ஆன்டிவைரஸ் வேலை செய்யவில்லை என்று தெரிந்துகொள்ளலாம். 

 


யாஹூ கணக்கை ஜீமெயிலுக்கு இம்பாரட் செய்வது எப்படி?

Posted by on | | 0 comments
நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து, இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கிற்கு எப்படி இம்போர்ட் செய்வது?

உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள்.


Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள். இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் ஐடி கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.


தொடரும் அடுத்த திரையில், உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.


அடுத்த திரையில் இம்போர்ட் செய்யவேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்தப்பின்னர், Start Import பட்டனை கிளிக் செய்யவும்.

அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான்! நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும். 


கருத்துக்களை மறக்காமல் இடவும்.....




Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வது எப்படி?

Posted by on | | 0 comments
Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வது எப்படி? என தெரியாமல் தவிக்கும் அனைவருக்கும் இதோ இந்த பதிவு.

Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்ய முதலாவதாக Microsoft compatibility pack நம் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 

இணையத்தினூடாக இந்த File இனை தறவிறக்கம் (Download) செய்து Install செய்துகொள்ள வேண்டும். 
செய்யும் முறை பின்வருமாறு....
File இனை Double Click செய்தவுடன் இவ்வாறான வின்டோ தோன்றும். அவ்வின்டோவில் Download கிலிக் செய்துவிடவும்


பின்னர் தோன்றும் இவ்வாறான வின்டோவில் கிலிக் செய்துவிடவும்.






அதன் பின்னர் இவ்வாறான விண்டோ தோன்றும். அதில் கிலிக் செய்துவிட்டால் அதன் பின்னர். Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வதால் பயன் பெறலாம்.




பதிவினைப்பற்றி கருத்துக்களை நாம் எதிர்ப்பார்க்கிறோம்.



Microsoft Word 2007 இல் Greeting Card செய்வது எப்படி?

Posted by on | | 0 comments
பொதுவாக ஒவ்வொரு நல்லநாளிற்கும் Greeting Card தேடிப்போகும் காலம் போய் தானாகவே Greeting Card உருவாக்குற காலம் வந்தாச்சு. இருந்தாலும் Greeting Card உருவாக்க தேவையான மென்பொருட்கள் சிலவேலைகளில் இருப்பதில்லை. எனினும் பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் Microsoft Word 2007  இல் Greeting Card செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதைப்பற்றியே முதலாவது பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Microsoft Word 2007 இல் Greeting Card செய்வது எப்படி?

01. Microsoft Word 2007 இனை திறந்துக்கொள்ளுங்கள்.

02. Microsoft Word 2007 இல் மேல்ப்பக்க இடது மூலையில் உள்ள Office Button இனை அழுத்தி கீழுள்ளவாறு வரும் வின்டோவில் New என்பதை கிலிக் செய்யவும். 


 


03.  அதன்பின் தோன்றும் Window வில் Greeting Cards என்பதனை Click செய்துவிட்டீரெனில் பின்வறுமாறு Window தோன்றும்



04. அதில் தேவையான வடிவத்தை கொடுத்துவிட்டு  செய்தால் அதன் பின்னர் வரும் கீழுள்ளவாறான வில் இனை தெரிவுசெய்துவிட்டு பின்னர் உங்களுக்கு தேவையான விதத்தில் உருவாக்கிக்கொள்ள முடியும்.



 

என்ன நன்பர்களே தயாரா? தயவுசெய்து உருவாக்கிபார்த்துவிட்டு உமது கருத்துக்களை இடவும். 



Related Posts Plugin for WordPress, Blogger...